Kajal Aggarwal In Indian 2 : Anirudh, Kamal Haasan, Kajal Aggarwal, Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் இருந்து காஜல் அகர்வால் தூக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Kajal Aggarwal In Indian 2 : பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தில் சித்தார்த் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க கமிட்டாகி இருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் தொடங்கியதோடு சரி அதோடு எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் இருந்து வருகிறது.

நேற்று விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம், இன்று அஜித் ரசிகர்களுக்கு – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இதனால் காஜல் அகர்வால் தன்னுடைய கால்ஷீட் வீணாகி விட்டதாகவும் அதற்கான நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் தயாரிப்பு நிறுவனத்திடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இந்தியன் 2 படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்டு விட்டதாகவும் அவருக்கு பதிலாக ப்ரியா பவானி ஷங்கரும், ஐஸ்வர்யா ராஜேஷும் கமிட் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து எவ்வித அதிகாரபூர்வ தகவலும் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பதால் வைரலாகி வரும் இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பதும் உறுதியாக தெரியவில்லை.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.