கையில் குழந்தையுடன் கணவருக்கு முத்தமிடும் புகைப்படத்தை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். தமிழில் அஜித் விஜய் சூர்யா தனுஷ் என பல நடிகர்களோடு இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

கையில் குழந்தை.‌. கணவருக்கு முத்தம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட ஸ்பெஷல் ஃபோட்டோ - அப்படி என்ன விசேஷம் தெரியுமா??

கௌதம் கிச்சலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வாலுக்கு ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. தற்போது குழந்தை குடும்பம் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் காஜல் அகர்வால் அவ போது சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் குழந்தையுடன் கணவருக்கு முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். காரணம் அவருடைய கணவர் கௌதம் கிச்சலுக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு முத்தமிட்டு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

கையில் குழந்தை.‌. கணவருக்கு முத்தம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட ஸ்பெஷல் ஃபோட்டோ - அப்படி என்ன விசேஷம் தெரியுமா??

காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் வைரலாக பலரும் கெளதம் கிச்சலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.