நடிகை காஜல் அகர்வால் அம்மாவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Kajal Agarwal in Rowdy Baby : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் தெலுங்கு என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அம்மாவாகும் காஜல் அகர்வால்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!!
ஒலிம்பிக் திருவிழா : செரீனா வில்லியம்ஸை தொடர்ந்து, பியான்காவும் விலகல்

திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ரவுடி பேபி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

என்னோட Minus யாருக்கும் வெளிய தெரியாது! – அஜித் & விஜய் பட இயக்குனர் Ezhil Speech | HD

ரவுடி பேபி என்ற ஒரு சிறிய பெண்ணையும் அம்மாவாக நடித்துள்ள காஜல் அகர்வால் மையப்படுத்திய கதையாக இப்படம் உருவாக உள்ளது. பல முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ராஜா சரவணன் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் சத்யராஜ் ரம்யா கிருஷ்ணன் லட்சுமி ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளார். நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகளை தொடர்ந்து காஜல் அகர்வாலும் அம்மா வேடத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.