Bigil Vs kaithi FDFS Puplic Opinion
என்னை வெட்டுனா கூட வெட்டட்டும், விஜய் பத்தி பேச மாட்டேன், அஜித் பத்தி வேணும்னா பேசுறேன் என அதிர வைத்துள்ளார் பாட்டி ஒருவர்.

தமிழ் சினிமாவில் வரும் தீபாவளிக்கு விருந்தாக கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி திரைப்படமும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படமும் உருவாகியுள்ளது.

இந்த இரண்டு படங்களில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது எது என மக்களிடம் கேட்டோம். அப்போது அவர்கள் கொடுத்த சில பதிலகள் வியப்பை தான் ஏற்படுத்தியது.

உதாரணத்திற்கு கைதினு ஒரு படம் வருதா? யாருடைய படம் அது? என இளம் பெண்கள் பதில் கூறி அதிர வைக்கின்றனர். அஜித் ரசிகர் ஒருவர் இரண்டு படமும் பார்க்க மாட்டேன், சரக்கடிச்சிட்டு தூங்கிடுவேன் என கூறுகிறார். இவரின் பதிலை கேட்கும் போது நம்ம புள்ளைங்கல்லாம் பயங்கரம் என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது.

மேலும் பாட்டி ஒருவரிடம் கேட்ட போது விஜய் பத்தியெல்லாம் பேச முடியாது, அஜித் பத்தி வேணா பேசுறேன். அவரோட ஒரு ஸீன் நடிக்கணும் என பேசுகிறார்.

இன்னொரு சிறுவன் தீபாவளிக்கு யார் படம் டா பார்ப்ப என கேட்டதற்கு கமல் படம் என லிஸ்ட்லேயே இல்லாத ஒன்றை கூறுகிறார்.

மற்ற ரசிகர்கள் அதிகம் பிகில் என கூறுகின்றனர், அதற்கு ஓரளவிற்கு இணையாக சிலர் கைதி படத்தின் பெயரையும் குறிப்பிடுகின்றனர்.

என்னை வெட்டுனா கூட வெட்டட்டும்.., விஜய் எனக்கு பிடிக்காது – அஜித்துக்கு கோரிக்கை வைக்கும் பாட்டி

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.