Kaithi Hindi Remake
கைதி திரைப்படம் ஹிந்தியில் ரிமேக்காக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த திரைப்படம் செம ஹிட்டடித்தது.

தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக்காகிறது. இப்படத்தில் ஹீரோவாக அதாவது கார்த்தி வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட்டுடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தின் இயக்குனர் யார்? யார் யார் நடிக்க இருக்கிறார்கள்? என்பது பற்றிய விவரங்கள் எல்லாம் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.