Kaidhi to Release on July 19 : Karthi | Vijay | Thalapathy 64 | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Kaidhi to Release on July 19 :

இப்படம் ஜூலை 19-ம் தேதி வெளியாகும் என தற்போது தகவல் கசிந்துள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த கார்த்தியின் கேரியரில் தேவ் ஒரு சின்ன சறுக்கலை சந்தித்தது.

அதன் பின் சுதாரித்துக் கொண்ட கார்த்தி, தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேடிப் பிடித்து நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!

அந்த வகையில் மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டது. இதைதொடர்ந்து இப்படத்தின் டீசருக்கு மக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

இந்நிலையில் இப்படம் ஜூலை 19-ம் தேதி வெளியாகும் என தற்போது தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் தான் அடுத்ததாக விஜய் படத்தையும் இயக்குவதால் இப்படத்துக்கு விஜய் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.