kadukkai Powder
kadukkai Powder

kadukkai Powder :

சித்தமருத்துவத்தில் மிக முக்கியமான காயகற்ப மூலிகைப் பொருளாக திகழ்வது, கடுக்காய். உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, நோய்களை போக்கும் அற்புத மருந்து கடுக்காய்.

1) கடுக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி கலந்து தேனில் சாப்பிட மூக்கடைப்பு, சளி குணமாகும்.

2) அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகுப்பொடி இவைகளை தேனில் கலந்து சுடுநீரில் சாப்பிட்டு வர கண் எரிச்சல் குணமாகும்.

3) அதிமதுரம், கடுக்காய், மிளகு ஓர் அளவாக எடுத்து வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து கொடுக்க இருமல் குறையும்.

4) கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும்.

5) அருகம்புல் பொடி, நெல்லிப் பொடி, கடுக்காய் பொடி தினமும் உணவில் சேர்க்க முடி நரைக்காது.

6) கடுக்காய்ப் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து, இந்து உப்புடன் கலந்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் குணமாகும்.

7) கடுக்காய்ப் பொடியில் பல் துலக்கினால், ஈறு வலி, ஈறுகளில் ரத்தம் வடிதல், பல் சொத்தை அனைத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.

8) 15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here