kadavul Vazhipaadu : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, ஆன்மிகம், அபூர்வ தகவல்கள், ஆன்மிகம்

kadavul Vazhipaadu :

▪ பொதுவாக ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜை வழிபாடுகளை செய்தால் தவறு. சாஸ்திரத்தில் பாவம் என்றும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

காரணம், பூஜை வழிபாடுகள் போன்றவை மங்கல காரியங்கள். ஈரத்துணி என்பது அமங்களத்தைக் குறிக்கும் விஷயம் என்பதால் தான் மரணம் நிகழ்ந்த வீட்டில் சில காரியங்களை ஈரத்துணியுடன்
செய்கிறார்கள்.

▪ஈரம் தோய்ந்த ஆடைகளுடன் வழிபாடு என்பது பெற்றோருக்குச் செய்யும் ஈமச்சடங்கிற்கு மட்டுமே உரித்தானது. இறை வழிபாட்டிற்கு உகந்தது அல்ல.

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள கஸ்தூரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – இதுக்கு தான் மேடம் உள்ள போனாங்களா?

▪ தொடர்ந்து ஈரத் துணி அணிந்து கொண்டு பூஜை செய்பவர்கள் பலர் எண்ணற்ற எதிர்மறையான பலன்களை வாழ்க்கையில் சந்திப்பதை அனுபவத்தில் காணமுடிகிறது. ஈர உடையுடனும் ஓர் ஆடையுடனும் தலை  குடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

▪இதில் விதிவிலக்கு என்பது உண்டு. அங்கப்பிரதட்சிணம் செய்யும்போதும், அம்பாளுக்கு வேண்டிக்கொண்டு கரகம், பூச்சட்டி ஆகியவற்றை எடுக்கும்போதும் மேலே மஞ்சள்நீர் ஊற்றிக் கொண்டு ஈரம் சொட்ட சொட்ட வழிபாடு செய்வார்கள். மற்றபடி சாதாரண சமயங்களில் ஈரத்துணியுடன் வழிபாடு செய்வது என்பது உகந்ததல்ல.

▪ மடி, ஆசாரம் பார்ப்பவர்கள் கூட ஈரத்துணிகளை நன்றாக பிழிந்து சற்று உலர்த்திய பின்னரே அணிந்துகொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here