kadaram kondan
kadaram kondan

kadaram kondan : விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு கடைசியாக ஸ்கெட்ச் படம் வெளியாகியிருந்தது. அதன்பின் அவர் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான அப்படம் இன்னும் முடிந்தபாடில்லை.

த்ரிஷா குறித்து பரவிய திடீர் வதந்தி – திட்டவட்டமாக மறுத்த அவர் தாயார்!

இந்த சமயத்தில் விக்ரம் பெரிதும் எதிர்பார்ப்பது கடாரம் கொண்டான் படத்தைத்தான்.

கமல் தயாரிப்பில் அவரது உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்கும் இப்படம் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது.

இப்படம் வரும் மே 31-ம் தேதி வெளியாகும் என ஒரு தகவல் வேகமாய் பரவத் துவங்கியது. ஆனால் அதை படக்குழு உடனடியாக மறுத்தனர். ரிலீஸ் தேதியை நாங்களே அறிவிக்கிறோம் என்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் முடிவுக்கு வரவிருப்பதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் பின்னணி இசைப்பணியின் போது ஜாலியாக பணியாற்றியதாகவும் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

பின்னணி இசை பணியே முடிந்துவிட்டதால் படம் கூடிய விரைவில் வெளிவந்துவிடும் என கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.