கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம், அபி ஹாசன், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடாரம் கொண்டான்.

படத்தின் கதைக்களம் :

பல்வேறு போலீஸ் கடாரம் கொண்டானான விக்ரமை இருவர் சுட்டு கொல்ல முயற்சி செய்கின்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்து வெளியே ஓடி வரும் விக்ரம் ஒரு விபத்தில் சிக்கி கொள்கிறார். சிக்கி கொண்ட இவர் அபிஹாசன் பணி புரியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அங்கும் விக்ரமை கொல்ல முயற்சி நடக்கிறது, ஆனால் விக்ரமை அபி ஹாசன் காப்பாற்றி விடுகிறார். அதன் பின்னர் விக்ரமின் கேங்கை சேர்ந்தவர்கள் அபி ஹாசனின் மனைவியான அக்ஷராஹாசனை கடத்தி வைத்து கொண்டு விக்ரமை மருத்துவமனையில் இருந்து வெளியேற கொண்டு வர கூறுகின்றனர்.

அபி ஹாசனும் கர்ப்பமாக உள்ள தன்னுடைய மனைவியை காப்பாற்ற வேண்டும் என்பதால் விக்ரமை போலீஸ் பாதுகாப்புகளை மீறி வெளியேற கொண்டு வருகிறார். இதனால் இருவரும் பொலிஸாரால் தேடப்படும் குற்றவாளியாகி விடுகின்றனர்.

அபி ஹாசன் விக்ரமிடம் இருந்து தப்பித்து தன்னுடைய மனைவியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக போலீசிற்கு தகவல் தெரிவித்து விடுகிறார். அபி ஹாசனை காப்பாற்ற வந்த பெண் போலீஸ் அதிகாரியை மற்றொரு போலீஸ் அதிகாரி கொன்று விடுகிறார். அந்த பழியை அபி ஹாசன் மீது சுமத்தி விடுகிறார்.

இந்த போலீஸ் கும்பல் ஏன் விக்ரமை கொல்ல முயற்சிக்கின்றனர்? இந்த பிரச்சனையில் இருந்து அபி ஹாசனும் விக்ரமும் எப்படி தப்பிக்கின்றனர். அக்ஷராஹாசன் காப்பாற்றப்பட்டாரா? இல்லையா? என்பது தான் மீதி கதையும் களமும்.

நடிகர் நடிகைகளின் நடிப்பு :

விக்ரம், அக்ஷராஹாசன், அபி ஹாசன் மற்றும் படத்தில் நடித்துள்ள போலீஸ் அதிகாரிகள் என அனைவருமே அவர்களுடைய கதாபாத்திரங்களை கனகச்சிதமாக முடித்து கொடுத்துள்ளனர்.

விக்ரமின் மாஸ் டைலாக், ஆக்ஷன் என அனைத்திலும் கலக்கியுள்ளார். அபிஹாசன் படத்திற்கு ஏற்றார் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளர். இனி நிறைய படங்களில் அபி ஹாசனை ஒரு ரொமான்டிக் ஹீரோவாக எதிர்பார்க்கலாம். அக்ஷராஹாசனும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

தொழில்நுட்பம் :

இசை :

ஜிப்ரானின் இசை படத்தின் மிக பெரிய பலம், பின்னணி இசையில் மிரட்டி தெறிக்க விட்டுள்ளார். விக்ரமின் நடைக்கும் BGM ம்யூசிக் பக்காவாக கை கொடுத்துள்ளது.

ஒளிப்பதிவு :

ஸ்ரீனிவாஸ் ஆர் குதாவின் ஒளிப்பதிவு அற்புதம். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக படம் பிடித்துள்ளார்.

எடிட்டிங் :

பிரவீன் கே.எல்-ன் எடிட்டிங் சூப்பர். இரண்டாம் பாதியில் நேரத்தை குறைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இயக்கம் :

ராஜேஷ் எம் செல்வா படத்தை முதல் பாதியில் கிளாஸாகவும் இரண்டாம் பாதியில் மாஸாகவும் கொண்டு சென்றுள்ளார். காட்சியையும் கதையையும் அழகாக கொடுத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. விக்ரம். அக்ஷராஹாசன், அபிஹாசன் என ஒட்டு மொத்த நடிகர் நடிகைகளின் நடிப்பு
2. படத்தின் பின்னணி இசை
3. விறுவிறுப்பான கதைக்களம்
4. ஸ்டண்ட் காட்சிகள்

தம்ப்ஸ் டவுன் :

1. இரண்டாம் பாதியில் ரன்னிங் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

Chiyaan Vikram and Dhruv Vikram Mass Entry | Kadaram Konadan FDFS | Fans Celebration | Kasi Theatre

Kadaram Kondan Movie Public Review | Chiyaan Vikram | Akshara Haasan | Abi Haasan | Kamal Haasan |

Kadaram Kondan Movie FDFS - Public Response | Mass Celebration | Chiyaan Vikram | Akshara Haasan |HD