kadaram kondan
kadaram kondan

kadaram kondan : விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு கடைசியாக ஸ்கெட்ச் படம் வெளியாகியிருந்தது.

அதன்பின் அவர் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான அப்படம் இன்னும் முடிந்தபாடில்லை.

இந்த சமயத்தில் விக்ரம் பெரிதும் எதிர்பார்ப்பது கடாரம் கொண்டான் படத்தைத்தான்.

ரசிகர்கள் அதிகம் விரும்பும் 30 ஆண் பிரபலங்கள் லிஸ்ட் – அஜித், விஜய்க்கு வந்த சோதனை.!

கமல் தயாரிப்பில் அவரது உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்கும் இப்படம் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் வரும் மே 31-ம் தேதி வெளியாகும் என ஒரு தகவல் வேகமாய் பரவத் துவங்கியது. ஆனால் அதை படக்குழு உடனடியாக மறுத்தனர். ரிலீஸ் தேதியை நாங்களே அறிவிக்கிறோம் என்றனர்.

ஆனால் தற்போது வரை இப்படத்தின் ரிலீஸ் குறித்த எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை. மேலும் தயாரிப்பாளர் கமல், தேர்தலில் பிஸியாகிவிட்டதால் படம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.

அதனால் மே 31-ம் தேதி கடாரம் கொண்டான் வெளிவர வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.

விக்ரம் பெரிதும் எதிர்பார்த்திருப்பது இந்த படத்தைதான். தற்போது இந்த படத்துக்கும் சிக்கல் வந்திருப்பதால் இதை விக்ரம் எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.