Kadambur Raju vs Tamizhisai Soundarajan
Kadambur Raju vs Tamizhisai Soundarajan

Kadambur Raju vs Tamizhisai Soundarajan – கோவில்பட்டி: “வரும் தேர்தலிலாவது நோட்டாவைவிட கொஞ்சம் அதிக ஓட்டுகள் வாங்குவது பாஜகவுக்கு நல்லது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான் நடக்கும்”என்று தமிழிசைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.

தற்சமயம் அதிமுகவும், பாஜகவும் ஒருவரையொருவர் சரமாரியாக டிவிட்டரில் விமர்சித்து வருகிறார்கள்.

முன்னதாக “தமிழகத்தில் ஆரோக்கியமான ஆட்சி நடக்கவில்லை என்றும், இதனால் மலர போவது தாமரைதான்” என்றும் அதிமுக அரசுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்திருந்தார்.,

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடைய இந்த கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசும்போது பதிலடி கொடுக்கும் வகையில் தமிழிசைக்கு சவால் விடுத்துள்ளார்.

கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்: “தமிழகத்தில் ஆரோக்கியமான ஆட்சி நடக்கிறதா, இல்லையா என்பதை மக்கள்தான் கூறவேண்டும்.

தமிழிசை போன்றவர்கள் எங்களுக்கு சர்ட்டிபிகேட் கொடுக்க தேவையில்லை” என்று கூறினார்.

மேலும் ஜெயலலிதாவின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார் என்றும்,

வருகிற தேர்தலிலாவது நோட்டாவைவிட அதிக ஓட்டுகள் வாங்குவது பாஜகவுக்கு நல்லது என்றும் மறைமுகமாக தமிழிசை சவுந்தரராஜன்க்கு சவால் விடுத்துள்ளார்.,

மேலும் பேசிய அவர், அதிமுகவுக்கு அதிக வாக்கு வங்கிகள் இருப்பது மக்களுக்கு தெரியும். தமிழகத்தில் தாமரை மலரப் போவது இல்லை.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் தொடரும்!! என்று தெரிவித்துள்ளார்.