Kadambur Raju Praises Thala Ajith
Kadambur Raju Praises Thala Ajith

தல அஜித்துக்கு நன்றி கூறி ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அரசியல் பிரபலம்.

Kadambur Raju Praises Thala Ajith : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவதை தடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு கோடி நிவாரண நிதி வழங்கி இருந்தார். மேலும் சினிமா தொழிலாளர்களின் அமைப்பான பெப்சி அமைப்புக்கு 25 லட்சம் நிதி அளித்திருந்தார்.

அஜித் கொடுத்த நிவாரண நிதி.. கஸ்தூரி பதிவிட்ட டுவீட் – என்ன சொல்கிறார் தெரியுமா?

தல அஜித்தின் இந்த உதவி மனப்பான்மையை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களும் பாராட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில் சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கின்ற அன்புச் சகோதரர் திரு.அஜித் அவர்கள் #Coronavirus தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.1.25 கோடி வழங்கியிருக்கின்றார்.

அவருக்கு செய்தி மற்றும் விளம்பர துறையின் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

#TNGovt #TamilNadu என குறிப்பிட்டுள்ளார்.