Kadamba Millets Soup
Kadamba Millets Soup

Kadamba Millets Soup – தேவையான பொருட்கள்:

குதிரைவாலி, வரகு, சாமை, பாசிப்பருப்பு – தலா 50 கிராம், தேங்காய் பால் – ஒரு கப்,
பூண்டு – 4 பல்,
மிளகுத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப, கறிவேப்பிலை -சிறிதளவு நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2,
சின்ன வெங்காயம் – 10,
சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

1) அனைத்து சிறுதானியங்களையும் கழுவி சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவேண்டும்.

2) தானியங்கள் ஊறிய தண்ணீரோடு அப்படியே அடுப்பில்வைத்து பாசிப்பருப்பு சேர்த்து கஞ்சி பதம் வரும் வரை வேக விட வேண்டும்.

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க நோ சொன்ன பிரபல நடிகர் – யார் தெரியுமா?

3) கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேகவைத்த கலவையை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

4) பிறகு தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும். தேவையான அளவு உப்பு மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.

5) சுவையான கதம்ப சிறுதானிய சூப் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here