Kadamba Kootu Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Kadamba Kootu Recipe :

தேவையான பொருள்கள்:

பாசிப்பருப்பு – 100 கிராம்
கேரட் – ஒன்று,
உருளைக்கிழங்கு – ஒன்று,
பீன்ஸ் – 10,
பச்சைப் பட்டாணி – 1 கப்,
அவரைக்காய் – 7,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
பூண்டு – 5 பல்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.
கடுகு – சிறிதளவு,
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:

கேரட்டைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கவும். பீன்ஸையும் பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கையும் தோல் சீவிப் பொடியாக நறுக்கவும். அவரைக்காயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

சரவணனை வெளியேற்றியது தவறு… வெளியேற்ற வேண்டியது இந்த கும்பலை தான் – பிரபல இயக்குனர் ஆவேச பேச்சு.!

1) பாசிப்பருப்பைக் குழைவாக வேகவைக்கவும்.

2) கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, அவரைக்காய், பச்சைப் பட்டாணியை ஒன்றாக தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

3) தேங்காய், பச்சை மிளகாயை விழுதாக அரைத்து வேகவைத்த காய் கலவையுடன் சேர்த்து, வேகவிட்ட பாசிப்பருப்பையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

4) வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், பூண்டு,
கறிவேப்பிலை தாளித்து, தயாரான கூட்டில் சேர்த்துக் கலக்கவும்.

5) சுவையான கதம்ப கூட்டு ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here