Kadalai Paruppu Sundal

Kadalai Paruppu Sundal :

கடலை பருப்பை வைத்து ருஷியான சுண்டல் செய்வது எப்படி தெரியுமா? வாங்க இந்த பதிவில் எப்படி செய்யணும் என்னென்ன பொருட்கள் தேவை அப்படினு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கடலைப் பருப்பு – ஒரு கப்.

தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி.

கடுகு, உளுந்து, பெருங்காய தூள் – சிறிதளவு.

இஞ்சி – சிறு துண்டு.

பச்சை மிளகாய் – 2.

நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு.

உப்பு, எண்ணை – தேவையான அளவு.

கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை :

கடலைப் பருப்பை உப்பு சேர்த்து நன்கு மலர வேக வைத்து எடுத்து கொள்ளவும். வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்க்கவும்.

இதனுடன் வெந்த கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல் சிறிதளவு சேர்த்து நன்கு கிளறி பிறகு நறுக்கிய வெங்காய தாள் தூவி இறக்கினால் சத்தான கடலைப் பருப்பு சுண்டல் தயார்.

நீங்களும் உங்க வீட்ல தயார் செய்து பாருங்க ரசிகர்களே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here