Kadaisi Vivasayi Secrets : Rajinikanth, Vetrimaaran, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema NewsKadaisi Vivasayi Secrets : Rajinikanth, Vetrimaaran, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Tamil Cinema News

விவசாயத்தை பேசும் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறுத்து விட்டதாக இயக்குனர் கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kadaisi Vivasayi Secrets : தமிழ் சினிமாவில் காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் மணிகண்டன்.

இவர் தற்போது கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 70 வயதான முதியவர் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் தான் இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் கெட்டப் வெளியாகி வைரலாகி இருந்தது. முதலில் மணிகண்டன் இந்த படத்தின் கதையை ரஜினிகாந்திடம் தான் கூறியுள்ளார்.

இந்தியன் 2 கைவிட்டா என்ன.. ஷங்கருக்கு அடிச்ச மிகப்பெரிய ஜாக்பாட்; லேட்டஸ்ட் அப்டேட்!

ஆனால் அவர் நடிக்க மறுத்து விட்டதாக மணிகண்டன் கூறியுள்ளார், மேலும் இந்த படத்தை பற்றி பேசிய 1 வாரத்திலேயே ரஜினி தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அரசியல் ஆசையில் உள்ள ரஜினிகாந்த் அரசியல் சார்ந்த படங்களை தவிரிப்பது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதே போல் வெற்றிமாறன் கூறிய அரசியல் கதையையும் ரஜினிகாந்த் வேண்டாம் என நிராகரித்து விட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.