விஜய் சேதுபதிக்கு மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகி உள்ள கடைசி விவசாயி திரைப்படம் வெற்றி கொடுக்குமா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

Kadaisi Vivasayi Movie Review : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி யோகி பாபு மற்றும் பல புதுமுகங்கள் நடிப்பில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் தான் கடைசி விவசாயி. இந்த படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் மாயாண்டி என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

விஜய்சேதுபதிக்கு வெற்றி கொடுக்குமா?? கடைசி விவசாயி படத்தின் முழு விமர்சனம்

படத்தின் கதைக்களம் :

விவசாயம் ஒன்று மட்டுமே தெரிந்த முதியவர் மாயாண்டி. காவலர் காக்கிச்சட்டையில் வந்ததைப் பார்த்து மின்வாரிய ஊழியர்கள் என நினைத்துக் கொள்ளும் அளவிற்கு அப்பாவித்தனமான மனிதர். இதே கிராமத்தில் யானையை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார் யோகி பாபு. அதேபோல் விஜய்சேதுபதி வாழ்க்கையில் நாட்டம் இல்லாத நபராக இந்த கிராமத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கிடையே நடக்கும் சம்பவங்களும் விவசாயிகள் பற்றியே அருமையையும் பேசுவது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

விஜய் சேதுபதி, யோகி பாபு எனவே இருவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் யோகி பாபு படத்தில் மிக குறைந்த காட்சிகளில் உள்ளது என்பது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்.

படத்தில் விவசாயியாக நடித்துள்ள மாயாண்டி என்பவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். உண்மையான அப்பாவித்தனமான விவசாயி என்பதால் அவர் அப்படியே இந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி போய் உள்ளார். அவருடைய ஸ்லாங்கில் பேசி அசத்தியுள்ளார்.

படத்தில் நீதிபதியாக நடித்துள்ள ரேய்ச்சல் மிகவும் யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். இனி அதிகமான படங்களில் இவரை எதிர்பார்க்கலாம்.

சிறிய கதையாக இருந்தாலும் அதனை தன்னுடைய திரைக்கதையின் மூலம் அனைவரையும் கவரும் வகையில் கொடுத்துள்ளார் இயக்குனர் மணிகண்டன். ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ள இவர் உசிலம்பட்டி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று வந்த உணர்வை ஏற்படுத்துகிறார்.

விஜய்சேதுபதிக்கு வெற்றி கொடுக்குமா?? கடைசி விவசாயி படத்தின் முழு விமர்சனம்

தம்ப்ஸ் அப் :

1. எதார்த்தமான நடிப்பால் நடிகர்கள் அனைவரும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.

2. படத்தின் கரு

3. இயக்கம்

தம்ப்ஸ் டவுன் :

1. படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

2. யோகி பாபுவுக்கு குறைந்த காட்சிகள் மட்டுமே உள்ளன.