விஜய் சேதுபதியுடன் நடிப்பது பள்ளிக்குப் போவது போல என புகழ்ந்து தள்ளியுள்ளார் அஜித் பட நடிகர்.

Kabir Singh About Vijay Sethupathi : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருப்பவர் கபீர் சிங். இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் றெக்க, அருவம், காஞ்சனா 3, ஆக்சன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

விஜய் சேதுபதியுடன் நடிப்பது பள்ளிக்குப் போவது போல.. புகழ்ந்து தள்ளிய அஜித் பட வில்லன்

தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் கபிர் சிங் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியுடன் நடித்தது குறித்து பேசியுள்ளார். அவர் திறமையான நடிகர் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டமாக பார்க்கிறேன். விஜய் சேதுபதியுடன் நடிப்பது நடிப்பு பயிற்சி பள்ளிக்கு செல்வதற்கு சமம் என கூறியுள்ளார்.