kabali rajinikanth :
kabali rajinikanth :

kabali rajinikanth : 2.0, பேட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

ஏப்ரல் 10-ம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்படம் குறித்த சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம் – பக்கா மாஸ் கூட்டணி.!

அதாவது கபாலி, காலா, பேட்ட வரிசையில் இந்த படத்திலும் ரஜினி தன் நிஜ வயதுடைய ஒரு கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறாராம்.

மேலும் கபாலி பாணியில் இந்த படத்திலும் ரஜினிக்கு ஒரு மகள் கதாபாத்திரம் இருப்பதாகவும் இதில் ஒரு முன்னணி நடிகை நடிப்பார் என்றும் தகவல் கசிந்துள்ளது.

ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பேட்ட படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

அதேபோல் பேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்திலும் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார்.