Kaavya Arivumani in Yellow Saree

பாரம்பரிய பட்டுப் புடவையில் மஞ்சக் காட்டு மைனா வாக்களிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் முல்லையாக நடித்து வரும் காவியா.

Kaavya Arivumani in Yellow Saree : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவியா அறிவுமணி. பாரதி கண்ணம்மா சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சித்ரா தற்கொலைக்குப் பிறகு அவருக்கு பதிலாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சித்ராவுக்கு கிடைத்த அதே வரவேற்பு காவ்யாவுக்கு கிடைத்துள்ளது எனலாம். ‌‌ மேலும் இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதாவது மஞ்சள் நிற புடவையில் மஞ்சக் காட்டு மைனாவாக இவர் நடத்திய போட்டோ ஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.