Kaattu Payale Lyrics Video Record
Kaattu Payale Lyrics Video Record

24 மணி நேரத்தில் காட்டுப் பயலே என்ற பாடல் 30 மில்லியன் பார்வையாளர்கள் உடன் சாதனை படைத்துள்ளது.

Kaattu Payale Lyrics Video Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.

இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ஆம் தேதி இப்படத்திலிருந்து காட்டுப் பயலே என்ற பாடலின் ஒரு நிமிட புரோமோ வெளியாகியிருந்தது.

இதனையடுத்து நேற்று மாலை 4 மணிக்கு இந்த பாடலின் முழு லிரிக் வீடயோ வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இது பாடல் 24 மணி நேரத்தில் யூடியூபில் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

ஒரு பக்கம் என் ஜி கே, இன்னொரு பக்கம் கத்தி – ஒரே நேரத்தில் 2 BGM-ஐ வாசித்து மிரட்டிய சிறுமி (வீடியோவுடன் இதோ)

இது குறித்து கவிஞர் சினேகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் இதயங்களை கவர்ந்த பாடலாக @Sudhakongara_of இயக்கத்தில் @Suriya_offl நடிப்பில் @gvprakash இசையில் சூரரைப் போற்று படத்தில் நான் எழுதிய காட்டுப்பயலே பாடலின் முழு விடியோ இதோ உங்கள் அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் என குறிப்பிட்டுள்ளார்.

சினேகனின் வரிகளுக்கு சூர்யா ரசிகர்கள் நன்றி கூறி வருகின்றனர்.

https://twitter.com/its_mahaoffc/status/1286643102879322113?s=19
https://twitter.com/SahaS73/status/1286632501268553734?s=19
https://twitter.com/GokulRocks_/status/1286648574843875328?s=19
https://twitter.com/chanAKAchandru/status/1286715595283718144?s=19