Kaattu Payale Full Lyrics Video
Kaattu Payale Full Lyrics Video

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் காட்டு பயலே பாடலின் முழு வீடியோ வெளியாகியுள்ளது.

Kaattu Payale Full Lyrics Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தை இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்க ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சூர்யாவின் பிறந்த நாளான நேற்று இப்படத்திலிருந்து காட்டுப் பயலே என்ற பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பாடலில் ப்ரோமோ வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை தொடர்ந்து முழு பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வந்தனர்.

சிம்புவுக்கு வில்லியாக மாநாடு படத்தில் இணைந்த பிரபல நடிகை – வெளியானது அசத்தலான தகவல்

இதனையடுத்து இன்று மாலை 4 மணிக்கு முழு பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது காட்டு பயலே பாடலின் முழு நெறி வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பாடலின் வரிகளும் ஜி வி பிரகாஷ் இசையும் அருமையாக அமைந்து இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த படம் லாக் டவுன் முடிந்ததும் தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.