காத்துவாக்குல 2 காதல் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Kaathu Vaakula Rendu Kadhal Teaser : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது இந்த படத்தின் டீசர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.