Kaappan Shoot to Resume Soon : Suriya, Sayyeshaa, Mohanlal, Arya, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Kaappan Shoot to Resume Soon :

கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த டீசர் 10 மில்லியனுக்கும் அதிகமான முறை கண்டுகளிக்கப்பட்டுள்ளது. சூர்யா பட டீசர் இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த இலக்கை அடைந்தது இதுவே முதல்முறை.

டீசரை தொடர்ந்து இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – திகைத்துப்போய் டிவீட் போட்ட கே.வி.ஆனந்த்!

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, ஆர்யா, பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

இவர்கள் போக பிரபல இந்தி நடிகர் சிரஜ் ஜனியும் இப்படத்தில் ஒரு வில்லனாக நடித்துள்ளார்.

ஒரு குஜராத்தி படத்தில் நடிக்கும் போது இவருக்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு படு காயம் அடைந்து அதனால் காப்பான் படப்பிடிப்பும் சில காட்சிகள் மீதமிருக்க நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இவர் குணமடைந்து வருவதாகவும் இதனால் காப்பான் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கி முடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.