Kaappaan Teaser
 Kaappaan Teaser

Kaappaan Teaser 

கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான்.

இயக்குநர் கே.வி.ஆனந்த், வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக இப்படத்தின் அப்டேட் வெளிவரும் என்று கூறியிருந்தார்.

அடுத்த கட்டத்துக்கு முன்னேறிய NGK – புகைப்படத்துடன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

அது காப்பான் படத்தின் டீசர் என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இந்நிலையில் படக்குழுவும் தற்போது இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Kaappaan Teaser
Kaappaan Teaser

மேலும் இரவு 7 மணிக்கு இந்த டீசர் இணையத்தில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.

நேற்றுதான் என்.ஜி.கே படத்தின் பாடல் வெளியாகியிருந்தது. அதற்குள் இன்னொரு சூர்யா பட அப்டேட் என்பதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சியில் உள்ளார்கள்.

சூர்யா 38 படத்தில் இணைந்த சர்ச்சைக்குரிய பிக் பாஸ் பிரபலம் – ஏன் இப்படி?

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.