Kaappaan Teaser

Kaappaan Teaser  : கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான்.

இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

வெளிவந்த 12 மணிநேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்து இப்படம் அதிவேகமாக 2 மில்லியன் பார்வைகளை கடந்த சூர்யா பட டீசர் எனும் புதிய சாதனையை நிகழ்த்தியது.

சூர்யா – சிவா படத்தின் நாயகி இவர்தான் – வெளிவந்த ஆச்சரியத் தகவல் இதோ!

இதைதொடர்ந்து தற்போது இந்த டீசர் 10 மில்லியனுக்கும் அதிகமான முறை கண்டுகளிக்கப்பட்டுள்ளது.

சூர்யா பட டீசர் இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த இலக்கை அடைவது இதுவே முதல்முறை.

இதனால் நெகிழ்ந்துப் போன கே.வி.ஆனந்த், ரசிகர்களுக்கு டிவிட்டரில் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

இதே வேகத்தில் சென்றால் சூர்யா படங்களில் அதிகமுறை பார்க்கப்பட்ட டீசர் எனும் இமாலய சாதனையை இந்த டீசர் படைக்கும் என சொல்லப்படுகிறது.

டீசரை தொடர்ந்து இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.