Kaappaan Audio Date

Kaappaan Audio Release Date : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது கே. வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சூர்யாவுடன் ஆர்யா, மோகன் லால், சாயீஷா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் கே. வி ஆனந்த தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் விரைவில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்திருந்தார்.

அதன் படி தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 21-ம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.