Kaappaan Audio Launch date
இயக்குனர் கே. வி ஆனந்த் பதிவிட்டுள்ள டீவீட்டை பார்க்கும் போது விரைவில் சூர்யா ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டம் இருப்பது தெரிய வருகிறது.

Kaappaan Audio Launch Date : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது கே. வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சூர்யாவுடன் ஆர்யா, மோகன் லால், சாயீஷா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் கே. வி ஆனந்த தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் விரைவில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

இதனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். சூர்யா ரசிகர்களுக்கும் மிக பெரிய கொண்டாட்டம் காத்துக் கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து நமக்கு கிடைத்த தகவலின் படி வரும் ஜூலை 21-ம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.