அறிமுக இயக்குனர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரையாடம் காளிதாஸ்.
இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம் வாங்க..
படத்தின் கதைக்களம் :
இன்ஸ்பெக்ஸ்டர் பரத் தன்னுடைய மனைவி அன் ஷீத்தலுடன் பிளாட் ஒன்றில் வசித்து வருகிறார். திடீரென இந்த பிளாட்டில் திருமணமான இளம் பெண்கள்எ அடுத்ததடுத்து இறக்கின்றனர். கொஞ்ச நாளிலேயே நான்கு பேர் இறந்து போக இது கொலையா? தற்கொலையா? என ஆராய தொடங்குகிறார் பரத்.
அசிஸ்டன்ட் கமிஷனரான சுரேஷ் மேனன் பரத்தை இயக்குகிறார். கடமையே கண் என் இருக்கும் பரத் இந்த கேசில் தன்னுடைய மனைவியை சரிவர கவனிக்காமல் மறந்து விடுகிறார். இதனால் இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது.
இறுதியில் நடந்தது என்ன? இந்த இறப்புகளுக்கு யார் காரணம்? பரத்தின் திருமண வாழ்க்கை என்னவானது என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.
படத்தை பற்றிய அலசல் :
பரத் என்ற நடிகர் ஒருவர் இருக்கிறார் என்பதையே மறக்க ஆரம்பிக்க தொடங்கி விட்ட நிலையில் காளிதாஸ் படத்தின் தன்னுடைய அசத்தலான நடிப்பில் வியக்க வைத்துள்ளார் பரத்.
சுரேஷ் மேனன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆதவ் கண்ணதாசன் அவருடைய வேலையை அழகாக செய்து முடித்துள்ளார். கிளைமேக்ஸ் காட்சிகளில் நம்மை மிரள வைக்கிறார்.
தொழில்நுட்பம் :
இசை :
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்கள் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு :
சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு தெளிவு. காட்சிகளை ஒவ்வொன்றையும் அழகாக படமாக்கியுள்ளார்.
எடிட்டிங் :
எடிட்டர் புவன் ஸ்ரீனிவாசனை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். படத்திற்கு என்ன தேவையோ அதனை அழகான கோர்வையாக அனைவரும் ரசிக்கும் படியாக கொடுத்துள்ளார்.
இயக்கம் :
அறிமுக இயக்குனரான ஸ்ரீ செந்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார். நாளை இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படம் மட்டும் இயக்கிய இவர் அறிமுக படத்திலேயே நம்மை அசர வைத்து விட்டார். படம் முழுவதும் அவர் வைத்துள்ள ட்விஸ்ட்டுகள் நம்மை சீட்டின் நுனியில் ரசிக்க வைக்கின்றன. கிமைமேக்ஸ் காட்சிகளில் தெறிக்க விட்டுள்ளார்.
தம்ப்ஸ் அப் :
1. பரத், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனனின் நடிப்பு அட்டகாசம்.
2. எதிர்பாராத கிமைமேக்ஸ்
3. படத்தில் இறுதி வரை ட்விஸ்ட்டை கொண்டு சென்றது.
தம்ப்ஸ் டவுன் :
1. சொல்லும் அளவிற்கு பெரிய குறைகள் இல்லை