Kaal Aani 
Kaal Aani 

Kaal Aani  : * மருதாணி, மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு கால் ஆணி மீது கட்ட கால் ஆணி அற்றுப்போகும்.

* மஞ்சள்,வசம்பு சிறிதளவு, கற்பூரம், மருதோன்றி இலை இவைகளை அரைத்து கட்டி வர கால் ஆணையின் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

* மல்லிகை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து கால் ஆணி மீது பூசி வந்தால் கால் ஆணி குறையும்.

* கீழாநெல்லியை அரைத்து பாதத்தில் கட்டிவிட ஆணி குறையும்.

* வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து பத்து போட கால் ஆணி மறையும்.

* இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

* இஞ்சிச் சாற்றுடன் நீர்த்த சுண்ணாம்பை கலந்து போட்டு வந்தால் கால் ஆணி குறையும்.

* பிண்ணாக்குக் கீரையை அரைத்து,மஞ்சள் தூள் கலந்து போட்டால் கால் ஆணி குறையும்.

* அம்மான் பச்சரிசி கீரையின் பாலை தடவினால் கால் ஆணி குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here