Kaajal Pasupathi About Sandy
Kaajal Pasupathi About Sandy

தப்பு என் மேலதான் அவரை விட்டுவிடுங்கள் என சாண்டி உடனான திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார் காஜல்.

Kaajal Pasupathi About Sandy : தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் சாண்டி. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் சாண்டி தமிழ் நடிகையான காஜல் பசுபதியுடன் ஏற்கனவே லிவ்விங் டு கெதர் முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

அதன் பின்னர் இவர்களுக்கிடையேயான பிரச்சனையால் இருவரும் பிரிந்து விட்டனர். காஜல் பசுபதியின் பிரிவுக்குப் பிறகு சில்வியா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

சுஷாந்த் சிங்கிற்கு நடந்தது போல எனக்கும் நடந்துள்ளது – அதிர்ச்சியை ஏற்படுத்திய தமிழ் நடிகை

இந்த நிலையில் சில்வியா பதிவிட்ட பதிவில் ரசிகை ஒருவர் சாண்டிய ஒரு கூட்டம் நல்லவன் என சொல்லிக் கொண்டு இருக்கிறது. ஆனால் அவர் காஜலை ஏமாற்றி விட்டார் என்பது போல கமெண்ட் அடித்துள்ளார்.

அந்த ரசிகனின் இந்த கமெண்டை பதிவிட்டு அடக்கடவுளே இதை இப்படியே விட்டுடுங்க. தவறு என் மீது தான். இதற்கும் சில்வியாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

தயவு செய்து அவர்களை விட்டு விடுங்கள் என கூறியுள்ளார். எட்டு மாதத்திற்கு முன்பே எதை எடுக்கப் ஒருவர் பதிவிட்ட பதிவிற்கு காஜல் பசுபதி தற்போது பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Roja_twitz/status/1275460194886025218?s=19