Ka Pae Ranasingam Review
Ka Pae Ranasingam Review

க/பெ ரண சிங்கம் திரைப்படம் எப்படி இருக்கு அதன் பிளஸ் மற்றும் மைனஸ் என்ன என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

Ka Pae Ranasingam Review : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரங்கராஜ் பாண்டே மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் க/பெ ரண சிங்கம். இந்த படத்தை பெ விருமாண்டி இயக்க கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் கதைக்களம் :

தமிழ்நாட்டுல ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி தன்னுடைய கிராமத்தில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் முதல் ஆளாக வந்து குரல் கொடுப்பவராக இருக்கிறார். இவர் பிழைப்பிற்காக துபாய் செல்கிறார்.

அவரும் அவருடன் துபாய் சென்ற இளைஞர்கள் அங்கு எந்தெந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் தன்னுடைய கணவருக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி எல்லாம் போராடுகிறார் என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் விருவிருப்பு கலந்த இந்த படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

விஜய் சேதுபதி மிக முக்கியமான வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்கு மிக மிக முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். காக்கா முட்டை, வடசென்னை, கனா போன்ற படங்களின் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த படமும் பெயர் வாங்கி கொடுக்கும் படமாக இருக்கும்.

ரங்கராஜ் பாண்டே நேர்கொண்டபார்வை படத்திற்கு அடுத்ததாக இப்படத்தில் முக்கிய வேடத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தொழில்நுட்பம் :

இசை :

ஜிப்ரானின் இசை இந்த படத்திற்கு பெரும் பலம் என்றே கூறலாம். பாடல்கள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு :

என் கே ஏகாம்பரம் என்பவர் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். காட்சிகள் ஒவ்வொன்றையும் அழகாக படமாக்கி உள்ளார்.

எடிட்டிங் :

சிவாநந்தீஸ்வரர் என்பவர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். படங்களை கச்சிதமாக கட் செய்து அழகான கோர்வையாக கொடுத்துள்ளார்.

இயக்கம் :

இயக்குனர் விருமாண்டி சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வு குறித்த கதை களத்தை கையில் எடுத்து அதனை அழகான படமாக்க கொடுத்துள்ளார். இப்படியான படத்தில் கொடுக்கப்பட்டு அவருக்கு நிச்சயம் வாழ்த்துக்கள் கூற வேண்டும்.

தம்ப்ஸ் அப் :

விஜய் சேதுபதியின் நடிப்பு
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு
இசை
ஒளிப்பதிவு

தம்ப்ஸ் டவுன் :

வழக்கமான லாஜிக்கல் தவறுகள்
சிறுசிறு குழப்பங்கள்

க/பெ ரணசிங்கம் படம் எப்படி இருக்கு?? - விமர்சனம் இதோ!