விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் சிங்கம் திரைப்படம் நேரடியாக OTT வழியாக வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Ka.Pae Ranasingam Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. நாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் தொடர்ந்து படங்களில் மிரட்டி வருகிறார்.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் க/பெ ரணசிங்கம். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை விருமாண்டி என்பவர் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக OTT-ல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனை படக்குழு மறுத்திருந்தது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறியிருந்தனர்.
இப்படியான நிலையில் ஜீ பிளக்ஸ் என்ற OTT நிறுவனம் க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் தங்களது பக்கத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.