Vijay Sethupathi Cinema Life Struggles
Vijay Sethupathi Cinema Life Struggles

விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரண சிங்கம் திரைப்படம் நேரடியாக ‌OTT வழியாக வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Ka/Pae Ranasingam Movie Release Date : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்களில் ஒன்று க/பெ ரண சிங்கம்.

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க விருமாண்டி இயக்கியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக இருந்து வருகிறது.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்துள்ளார்.

Ka.Pae Ranasingam Release Update
Ka.Pae Ranasingam Release Update

உலகம் முழுவதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி ஜூ பிளெக்ஸ் என்ற OTT நிறுவனத்தின் வழியாக வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனை விஜய் சேதுபதியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.