Ka Pae Ranasingam Movie One Time Ticket Fare – Fans Shocked

YouTube video

Justin Bieber Follows GV Prakash in Twitter : தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இதுவரை 70 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தொடர்ந்து வருடத்திற்கு டஜன் கணக்கில் படங்களை கொடுத்து வருகிறார்.

மேலும் இவர் முதல் முறையாக ஹாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையில் உருவான கோல்டு நைட்ஸ் என்ற பாடல் ஆல்பம் சமீபத்தில் வெளியானது.

இந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஹாலிவுட் சினிமாவில் நுழைந்த முதல் பாடலிலேயே சிக்ஸர் அடித்து உள்ளார் ஜிவி பிரகாஷ்.

இந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷுக்கு இன்னும் பெருமை சேர்க்கும் விதமாக சர்வதேச அளவில் பிரபலமான பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் அவர்கள் ஜிவி பிரகாஷை ட்விட்டரில் பின்தொடர தொடங்கியுள்ளார்.

இவர் ஜிவி பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம் பாடலை கேட்டு இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த பாடல் ஜஸ்டின் பீபருக்கு பிடித்துப் போகவே அவர் அவர் ஜிவி பிரகாஷ் பின்தொடர்கிறார் என பேசப்பட்டு வருகிறது.

பச்சை தமிழனாக ஜீவி பிரகாஷ் சர்வதேச அளவில் கலக்க தொடங்கி இருப்பது ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழனாக சர்வதேச அளவில் சாதனை படைத்ததற்காக திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.