Ka Pae Ranasingam Censored With U
Ka Pae Ranasingam Censored With U

க/பெ ரணசிங்கம் படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ka Pae Ranasingam Censored With U : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள க/பெ ரணசிங்கம்.

பெ விருமாண்டி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி ஜூ பிளக்ஸ் என்ற இணையதளத்தின் வழியாக வெளியாக உள்ளது. படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் 199 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது படத்திற்கு சென்சார் பணிகள் நிறைவடைந்து யு சான்றிதழ் கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த படத்தை பார்க்கலாம்.