Vijay
தளபதி விஜய் எங்க? இவர் எங்க? என இயக்குனரின் பேச்சால் கடுப்பாகி உள்ளனர் விஜய் ரசிகர்கள்.

K.S Ravikumar : தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் நான் சிரித்தால்.

இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தில் நடித்திருந்த நடிகரும் இயக்குனருமான கே.எஸ் ரவிக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது விஜயும் ஆதியும் ஒரே மாதிரி தான், இருவரும் நடிப்பில் வேற வேறயா இருந்தாலும் நடத்தையில் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என பேசினார்.

இதனை கேட்ட விஜய் ரசிகர்கள் விஜய் சினிமாவில் 27 வருட அனுபவம் உடையவர், ஆதி 3 படம் தான் நடிச்சிருக்கார். இருவருக்கும் வித்தியாசம் இருக்கு, இப்படி விஜயுடன் ஒப்பிட்டு பேசாதீங்க என தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

விஜய் மாதிரியே வெக்கப்படுவாரு - K S Ravikumar Speech | Naan Sirithal Success Meet