விக்கு வாங்கி கொடுத்தே கடனாளி ஆகிறோம் என டாப் நடிகர்களை விளாசி உள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன்.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் கே ராஜன். இவர் தற்போது பெரும்பாலான திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு தயாரிப்பாளர்கள் படும் கஷ்டம் நஷ்டம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.

மேலும் டாப் நடிகர்கள் வாங்கும் அதிகமான சம்பளத்தால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் கஷ்டம், நஷ்டம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேசி ஒன்றில் பெரிய நடிகர்களுக்கு விக்கு வாங்கி கொடுத்தே கடனாளி ஆகிறோம் என தெரிவிக்கின்றார். ஒரு விக்கோட விலை 25 ஆயிரம். இதிலும் எவ்வளவு ஏமாற்று வேலைகள் நடக்கிறது தெரியுமா? என பேசியுள்ளார்.

அதேபோல் பெரிய நடிகர்கள் ஷூட்டிங்கிற்கு வர அவர்களது காருக்கு நாங்க பெட்ரோல் போட வேண்டும். அப்போ அவர்கள் வாங்கும் சம்பளம் எல்லாம் எங்கே போகிறது என கேள்வி எழுப்பி உள்ளார். கே ராஜன் இந்த பேச்சால் விக்கு விஷயத்தில் இவர் யாரை சொல்கிறார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.