Bigil
பிகில் திரைப்படம் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக தயாரிப்பாளர் ஓருவர் அடித்து கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ 300 கோடிக்கு வசூல் செய்ததாக கூறப்பட்டு வருகிறது.

இந்த படத்தை அட்லீ இயக்க AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. உண்மையில் இப்படம் சில பகுதி விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக தயாரிப்பாளர் கே ராஜன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

திருச்சி விநியோகிஸ்தர் பிகில் நஷ்டத்தால் நெஞ்சை பிடித்து கொண்டு உட்கார்ந்து விட்டார். ஆனால் ஓரளவிற்கு வசூல் வந்து விட்டது, இதனால் வட்டி பணம் தான் நஷ்டமானது என கூறியுள்ளார்.

அதே போல் செங்கல்பட்டு பகுதி விநியோகிஸ்தருக்கும் இப்படம் நஷ்டத்தை கொடுத்திருக்கிறது, இதற்கெல்லாம் இயக்குனர் அட்லீ இழுத்து விட்ட தேவையில்லாத செலவுகள் தான் என சாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here