தனுஷ் செய்வது அயோக்கியத்தனம் இப்படி எல்லாம் செய்யலாமா என அவரை வெளுத்து வாங்கியுள்ளார் பிரபல தயாரிப்பாளர்.

இந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வருகிறார். அதேபோல் நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் இயக்குனராகவும் தன்னுடைய திறமையை நிலைநாட்டியுள்ளார்.

தனுஷ் செய்வது அயோக்கியத்தனம்.. இப்படி எல்லாம் செய்யலாமா?? வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர்

தயாரிப்பாளராகவும் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் இவரை தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது வெளுத்து வாங்கியுள்ளார்.

நடிகர் தனுஷ் அசுரன், கர்ணன் போன்ற படங்களின் மூலமாக நல்ல நடிகன் என்பதை நிலைநாட்டி விட்டார். ஆனால் ஒரு தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே சூட்டிங் மொத்தமாக முடிய 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நேரத்தில் பாலிவுட் பட வாய்ப்பு வந்தது இந்த படத்தை ஓரம் கட்டிவிட்டு நடிக்க சென்றுவிட்டார்.

தனுஷ் செய்வது அயோக்கியத்தனம்.. இப்படி எல்லாம் செய்யலாமா?? வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர்

அப்படி என்றால் தமிழில் இவரை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளரின் நிலை என்ன? இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம், இப்படி எல்லாம் செய்யலாமா? இது தயாரிப்பாளருக்கு செய்யும் துரோகமல்லவா என அவரை வெளுத்து வாங்கியுள்ளார். மேலும் இது பிரச்சனைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காண வேண்டும் எனவும் கூறியுள்ளார்.