K.Bhagyaraj‘s Mundhanai Mudichu Movie Remake

“முந்தானை முடிச்சு” ரீமேக்…. பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ..!

YouTube video

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் திரைக்கதையின் ஜாம்பவானாகவும் வலம் வருபவர் பாக்யராஜ்.

சிம்பு மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால் வேற லெவலுக்கு போயிருப்பார் – ஆனால் கோட்டை விட்டுட்டாரு!

இவரது இயக்கத்தில் வெளியான பல படங்கள் இன்று வரை பேசப்படும் படங்களாகவே இருந்து வருகின்றன. அடல்ட் காமெடிகளை மையமாக வைத்து படத்தை இயக்கிய முதல் தமிழ் இயக்குனர் இவர் தான்.

இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று முந்தானை முடிச்சு. இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படமாக இது இருந்து வருகிறது.

இதனால் இந்த படத்தை ரீமேக் செய்வதில் பலரும் ஆர்வம் காட்டி வந்த நிலையில் இப்படம் நடிகர் சசிகுமார் நடிப்பில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தை தொடர்ந்து விஜய் படத்தில் இணைந்த ரங்கராஜ் பாண்டே – அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

இதற்காக சசிகுமாரும் பாக்யராஜிம் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை JSB ஸ்டுடியோ சார்பாக ஜே எஸ் பி சதீஷ் தயாரிக்க இருப்பதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இப்படத்தை இசையமைப்பாளர் பாலாஜி பால்ராஜ் இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் பாக்யராஜிடன் 12 வருடங்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் இன்னும் யார் யார் எல்லாம் நடிப்பார்கள்??

நாயகியாக யார் நடிப்பார் என்பது எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.