சித்தி 2 சீரியலில் முக்கிய நடிகர் ஒருவரும் இணைந்து நடித்திருப்பது வீடியோ ஒன்றின் மூலமாக தெரிய வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட சீரியல் சித்தி. வரும் ஜனவரி 27-ம் தேதி முதல் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சீரியலில் சிவகுமாருக்கு பதில் பொன்வண்ணன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதற்கான ப்ரோமோ வீடியோ ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இதனை தொடர்ந்து இன்னொரு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது, அதில் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜும் இணைந்து நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
குடும்பத்தைத் தாங்கும் ஆலமரத்தின் வேராய்..#சித்தி2 ஜனவரி 27 முதல் இரவு 9 மணிக்கு உங்கள் #சன்டிவி – யில் காணத்தவறாதீர்கள். #Chithi2 #Chithi2OnSunTV #ChithiIsBack #Radhika #SunTV #SociallySun@realradikaa pic.twitter.com/6pBchFvLaE
— Sun TV (@SunTV) January 19, 2020