
Rajam Balachandhar : இயக்குனர்களின் சிகரம் என போற்றப்படும் மறைந்த கே.பாலச்சந்திரின் துணைவியார் திருமதி ராஜம் பாலச்சந்தரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகத்தில் இயக்குனர்களின் சிகரமாக போற்றப்படுபவர் கே.பாலச்சந்தர். ரஜினி, கமல் என மிக பெரிய ஜாம்புவான்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் இவர் தான் என்பது நாடறிந்த ஒன்று.
கே.பாலச்சந்திரன் துணைவியார் ராஜம் பாலச்சந்தர். சென்னையில் வசித்து வந்த இவர் உடல் நல குறைவால் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார்.
இவரது மறைவு தமிழ் சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராஜம் பாலச்சந்தரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை சென்னையில் நடைபெறும் என கூறப்படுகிறது.
கே.பாலச்சந்தர் அவர்களுக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும் பிரசன்னா பாலச்சந்தர் மற்றும் கைலாசம் பாலச்சந்தர் என இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.