K B Films Balu Passes Away

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

K B Films Balu Passes Away : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்து இருந்தாலும் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்த படவில்லை.

தமிழகத்தில் தினம் தினம் குறைந்தது ஆயிரம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் சின்னத்தம்பி பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்திருந்த தயாரிப்பாளர் கே பி பிலிம்ஸ் பாலு கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதாவது கொரானா தொற்றுக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்துள்ளார்.

இவருடைய மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.