Jyothika Salary to Ponmagal Vanthal
Jyothika Salary to Ponmagal Vanthal

பொன்மகள் வந்தாள் படத்திற்கு ஜோதிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து சூர்யா பேசியுள்ளார்.

Jyothika Salary to Ponmagal Vanthal : தமிழ் சினிமாவில் 90களில் அஜித் விஜய் சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஜோதிகா.

மெகா கூட்டணியுடன் ரஜினியாக மாறும் சிம்பு, இயக்குனர் யார் தெரியுமா? – அடுத்த படம் குறித்து வெளியான தகவல்கள்!

அதன்பின் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் நடிப்பிற்கு முழுக்கு போட்டார். திருமணத்திற்குப் பின்னர் குழந்தைகள் வளர்ந்த பிறகு ஜோதிகா தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

இவரது நடிப்பில் இறுதியாக பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சூர்யாவிடம் ரசிகர் ஒருவர் பொன்மகள் வந்தாள் படத்திற்காக ஜோதிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு என கேட்டுள்ளார்.

அதற்கு சூர்யா 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஜோதிகாவின் சம்பளத்தில்தான் செயல்படுகிறது என பதிலளித்துள்ளார்.

விட்ட வாய்ப்பை மீண்டும் பிடித்த நடிகை.. சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகாவுக்கு பதில் இவர்தான் நடிக்கிறாரா?

அதேபோல் ஜோதிகா கூறியதாவது எனக்கு கிடைத்த பெரிய சம்பளமே சூர்யா ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு தான்.

என்னுடைய படத்தின் ட்ரைலரோ அல்லது படமோ வெளியானால் அவர்கள் கொடுக்கும் ஆதரவு தான் தனக்கு கிடைத்த பெரிய சம்பளம் என கூறியுள்ளார்.