Jyothika Ratchasi Movie :Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Jyothika | Ratchasi Movie

Jyothika Ratchasi Movie :

ஜோதிகா நடித்துள்ள மற்றொரு படமான ராட்சசி படத்தை ஜூன் 28ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர்.

குலேபகவாலி இயக்குனர் கல்யாணின் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் ஜாக்பாட்.

35 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜெயலலிதா பயோபிக் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? பிரமிக்க வைக்கும் தகவல்!

ஜோதிகாவுடன் ரேவதி, ஆனந்த்ராஜ், யோகிபாபு, மன்சூர் அலிகான் என ஒரு பட்டாளமே நடித்துள்ளனர். சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தற்போது என்ன நினைத்தார்களோ இந்த படத்தை அப்படியே ஓரங்கட்டிவிட்டு ஜோதிகா நடித்துள்ள மற்றொரு படமான ராட்சசி படத்தை ஜூன் 28ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர்.

அதே நாளில் விமலின் களவாணி 2, யோகி பாபுவின் தர்மபிரபு ஆகிய படங்களும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.