Jyothika Next
Jyothika Next

Jyothika Next : நடிகர் சூர்யா தற்போது காமெடி படத்தை கையில் எடுத்துள்ளார். ஆனால் அவர் நடிக்கவில்லை படத்தை தயாரிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூரியா. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK மற்றும் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

அதே சமயம் 36 வயதினிலே, கடைக்குட்டி சிங்கம் போன்ற வெற்றி படங்களையும் தயாரித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து மீண்டு ஜோதிகா நடிக்க உள்ள படத்தை தயாரிக்க உள்ளார்.

குலேபகவாலி படத்தின் இயக்குனர் கல்யாண் காமெடி படமாக இதனை இயக்க உள்ளார். ஜோதிகாவுடன் ரேவதியும் இணைந்து நடிக்க உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Jyothika New Movie Launch Stills
Actress Jyothika New Movie Launch Stills

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here