jyothika New Movie
jyothika New Movie Release

jyothika New Movie : திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார்.

அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் இதில் பெரும்பாலும் நாயகி சார்ந்த படங்களிலேயே நடிக்கிறார்.

அந்தவகையில் குலேபகவாலி இயக்குனர் கல்யாணின் இயக்கத்தில் இவர் ஒரு படத்தில் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்புதான் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த படம் மே 17-ம் தேதி திரைக்கே வந்துவிடுமாம்.

எப்படி இப்படி ஜெட் வேகத்தில் ஜோதிகா ஒரு படத்தை முடித்திருக்கிறார் என்பதுதான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி, ஆனந்த்ராஜ், யோகிபாபு, மன்சூர் அலிகான் என ஒரு பட்டாளமே நடித்து வருகிறது. சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதுபோக இரண்டு புதுமுக இயக்குனர்களின் படங்களிலும் ஜோதிகா நடித்துவருகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.