Jyothika
Jyothika

Jyothika : 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்தவர் ஜோதிகா.

திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார்.

அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் பிரபல நடன இயக்குநர் பிருந்தா, 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிகாவுடன் தான் எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்றை தற்போது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அத்தோடு தற்போது எடுத்துகொண்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு 20 Years Challenge With Joe என்றும் கூறியுள்ளார்.

ஜோதிகாவின் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் பெரும்பாலும் நாயகி சார்ந்த படங்களிலேயே ஜோதிகா நடிக்கிறார்.

அந்தவகையில் குலேபகவாலி இயக்குனர் கல்யாணின் இயக்கத்தில் இவர் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மே 17-ம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி, ஆனந்த்ராஜ், யோகிபாபு, மன்சூர் அலிகான் என ஒரு பட்டாளமே நடித்து வருகிறது.

சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இதுபோக இரண்டு புதுமுக இயக்குனர்களின் படங்களிலும் ஜோதிகா நடித்துவருகிறார்.

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.